வண்ணதாசனின் தொடக்ககாலக் கதைத் தொகுதிகள்
முனைவர். ச. மகாதேவன்
தமிழ்த்துறைத் தலைவர்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
திருநெல்வேலி – 627 011.
1. கலைக்க முடியாத ஒப்பனைகள் (1976)
2. தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் (1978)
3. சமவெளி (1983)
யாராலும் பதிவு செய்யப்படாத பாத்திரங்களை அழுத்தமாக இம்மூன்றாம் தொகுதியில் வண்ணதாசன் துணிந்து படைத்துள்ளார். தேரோட்டம் பார்க்கத் துடிக்கிற கோமு (நிலை), கோட்டிக்காரி பொன்னம்மா (தாகமாய் இருக்கிறவர்கள்), அடுத்த கதையைப் படிக்க விடாமல் மனதில் உறுத்தும் பக்கா, குஞ்சு (வருகை), 'இந்த இடத்தில் வாழக்கையை ஆரம்பித்தால்கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும்', என்று நினைத்த ஓவியன் (சமவெளி), 'சின்னு முதல் சின்னுவரை' நீள் கதைக்கு முன்பாகவே, 30 பக்கங்களில் லாட்ஜ் நிகழ்வுகளில் சிவனைப் பொருத்தி எழுதிய 'வரும்போகும்' என்ற நீள் கதை, அசுத்தம் செய்த பூனையை விரட்ட பூனையை விட அறையை அதிகமாக அசிங்கம் செய்தவனின் 'பூனைகள்' கதை, போன்ற அருமையான கதைகள். வயோதிகத்தின் காரணமாகக் காது கேட்காத தாத்தாவை உடல் மொழியால் பேசிக் சமாதானப்படுத்திய ’கூறல்' கதை, மரத்தை மனிதனை விட உயரமாக உயர்த்திய ’வெளியேற்றம்’ கதை. பூ விற்றவனைப் பற்றிப் பேசிய 'உதிரி' கதை போன்ற அருமையான கதைகள் இத்தொகுதியில் உண்டு.
4. பெயர் தெரியாமல் ஒரு பறவை (1985)
வண்ணதாசன் கதைகளில் முத்திரை பதித்த 'பெயர் தெரியாமல் ஒரு பறவை' அவரது நான்காம் தொகுதி. அவருடைய அகராதியில் அஃறிணை என்பது உயர்திணையே என நிருப்பித்த தொகுதி பெயர் தெரியாமல் நிலக்கோட்டை அறைவாசலில் கிடந்த ஏதோ ஒரு பறவை, மனக்குப்பைகளைக்கூட்ட வந்த சிலம்பாயி (வேறு வேறு அணில்கள்), அன்பின் சிநேகிதனாய் வைத்தியலிங்க சித்தப்பா (ஆறுதல்), ஷிபா மருத்துவமனையில் படுக்கையிலிருந்த மனிதரின் மனநிலைகாட்டிய 'கடைசியாகத் தெரிந்தவர்' கதை. குழந்தையின் கழுத்தில் போட்ட சங்கிலி காலில் போட்டதாய் மாறிய 'சங்கிலி' கதை, குழந்தைகளிடம் எரிந்து விழுந்த சென்பகம் (அந்தந்த தினங்கள்), புல்லாங்குழல் இசை வழிந்த 'திறப்பு', கதை 'கூறல்' கதையின் நீட்சியாய் இன்னொரு தாத்தாவோடு 'நிறை' கதை, அற்புதமான விருத்தா எனும் புகைப்படக் கலைஞனின் கதை (போய்க் கொண்டிருப்பவள்), சொந்த ஊரில் அடங்கத்துடித்த 'அடங்குதல்' கதை, ஒர்க் ஷாப் பையன்களைப் பதிவு செய்த 'பட்டறைகள்' கதை, விலங்குகளைவிடக் கேவலமாய் நடத்தப்பட்ட பொன்னுலட்சுமியின் (மிதிபட) கதை என்று தமிழ்க்கதைகளை எண்பதுகளில் வண்ணதாசன் வேறு தளத்திற்கு நகர்த்தியது புலனாகிறது.
5. மனுஷா மனுஷா (1990)
6. கனிவு (1992)
எழுத்திலும் கனிவும் பக்குவமும் பதமும் வண்ணதாசனின் ஆறாவது தொகுதியில் தெரிகிறது. நவாப்பழம் விற்கும் களக்காட்டு சாய்பு (பற்பசைக் குழாயும் நாவல் பழங்களும்), நீச்சல் பழகுகிறவனின் அன்புக்குரிய மகாதேவன் பிள்ளை (நீச்சல்), வயதான பாட்டியைக் கவனித்து வந்த தனலட்சுமியின் (விளிம்பில் நிற்கிறவர்கள்), மண்ணை வைத்துக் கலைகள் புரிந்த ஆறுமுக வேளார் (நிழல்குதிரை), வண்ணதாசன் கதைகளில் கொடூரமாக ஆண்களால் தாக்கப்பட்ட கிட்டி போன்ற அப்பாவிப் பாத்திரங்கள், இகாரஸ், எனும் கிரேக்கத் தொன்மத்தை வைத்து எழுதிய 'சூரியன் அருகில் பறக்கிறவர்கள்' என்ற புகழ் பெற்ற கதை போன்ற கதைகள் இத்தொகுதியில் உள்ளன.
This entry was posted
at 04:01
. You can follow any responses to this entry through the
.