பட்டம் விட்டதில்லை

Posted


பசலிப் பழங்களை நசுக்கி
நகச் சாயம் இட்டதில்லை
பஞ்சு மிட்டாய் தின்று
கண்ணாடியில்
நா நீட்டிப் பார்த்ததில்லை
சோப்பு நீர் கொண்டுக்
குமிழிகள் விட்டதில்லை
காகிதம் கிழித்துக்
கப்பல் ஒன்றும் விட்டதில்லை
வாடகை சைக்கிள் ஓட்டி
கை விட்டுப் பறந்ததில்லை
பட்டம் விட்டதில்லை
படம் போட்டுப் பழக்கமில்லை
பம்பரம் பார்த்ததில்லை
கோலிக்கா சேர்த்ததில்லை
ஒன்றும் அறியாமல்
கம்பிக்குள் வாழ்கிறேன்
அரை மணி நேரத்தில்
அறுபடப் போகும்
பிராய்லர்போல 

This entry was posted at 06:31 . You can follow any responses to this entry through the .

0 comments