Posted

Posted


Posted


Posted


Posted



Posted



Posted


உயரத்திலிருப்பவன்

அரைசாண் வயிற்றுக்காக அவன்
அந்தரத்தில் செல்பேசிக் கோபுரம்
கட்டிக் கொண்டிருக்கிறான்
அவன் வயிறு வானத்திற்கருகே
சுருங்கிக் கிடக்கிறது.

உயரே ஏற ஏற அதள பாதாளம் நோக்கி
இறங்குகிறது அவன் உடலும் குடலும்

பள்ளத்தில் கிடக்கும் அவாகள் வாழ்வதற்காக
சாவின் உயரத்தைச் சந்தித்துத் திரும்புகிறாகள்.

செல்பேசி கோபுரங்களில்,
காற்றாலை மின் விசிறிகளில்,
தொலைக்காட்சி கோபுரங்களில்
இருப்போரை இனி அண்ணாந்து பாக்காதாகள்.

உயரத்திலிருப்பவனெல்லாம்
உயாந்திருப்பவனில்லை
என்ற உண்மை பியும் வரை.

Posted

இறுதி நிமிடங்கள்

ழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் இதயத்தைப் பிழிந்த இறுதி நிமிடங்கள் - அரிய தகவல்களோடு பாகவதரின் இசை வாழ்வில் ஓர் இனிய பயணம்

    எம்.கே. தியாகராஜ பாகவதரின்சிவகவிஓராண்டுக்கும் மேலாக ஓடிய அழகு காவியம்.  மு. ராமலு நாயுடுவின் இயக்கத்தில் பாகவதரின் பாடல்களுடன் ஈடு இணையற்ற வெற்றியைச் சிவகவி திரைக்காவியம் தந்தது.
    “உலகமே நாடக மேடை, நாமெல்லாம் நடிகர்கள்என்ற செய்தியை அழுத்தமாகச் சொன்ன படம்சிவகவி.“  பாகவதரின் ஜோடியாக எஸ். ஜெயலட்சுமி நடித்தார்.  வில்லிவேடத்தில் டி.ஆர். ராஜகுமாரி சிவகவியில்தான் அறிமுகமானார்.
    இல்லற சுகத்தில் மாட்டி இறைவனை மறந்து வாழ்வை வீணடித்த உணர்வில் பாகவதர் பாடுவதாகப் பாபநாசம் சிவன்ஸ்வப்பன வாழ்வில் மகிழ்ந்து பாடலை எழுதினார்.
    “காயமே இது பொய்யடா... காற்றடைத்த பையடாஎனும் வரிகளை நினைவுபடுத்துவதாய் இன்ப வெறிக்கு இரையாகி, இறைநெறியை விட்டு விலகியவன் தன் தவற்றை உணர்ந்து பாடும் பாடல் பெரும் புகழ் பெற்றது.
    “ஸ்வப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்ரமண்ய
    ஸ்வாமியுனை மறந்தார்அந்தோ
    அற்பப் பணப் பேய் பிடித்தே அறிவிழந்து
    அற்பர்களைப் புகழ்வார்
    அற்பமாகக் கிடக்கும் பணமெனும் பேய் பிடித்து அறிவை இழந்து, தன்னிலை மறந்து ஒன்றுமற்றவர்களைப் புகழும் மனிதர்கள்... தமிழர்களின் சொந்தக் கடவுளே! எங்கள் கந்தக் சிவகவியின் வெற்றி தெய்வீகப் பாடல்களின் வெற்றியாக அமைந்து விட்டது.
    “திருவருள் தர இன்னும் மணமில்லையானால் திருவடி இணையிலென் உயிர் விடுவேன்என்ற பாடலில் பாகவதர் காளியைப் போற்றிப் பரவினார்.
    “வள்ளலைப் பாடும் வாயால்
    தறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ
என்ற பாடலில் முருகனை மாயோன் மருகனைப் பாடினார்.
    “தமியேன் பைந்தமிழ் அன்னையின்
    பாலருந்தித் தவழ் பாலன்
    தமிழ்வளர உயர்வாழும் ஊழியனென்று
    தமிழரசி அங்கயர்க்கண் உமையன்னையே தயவில்லையா
என்ற பாடலில் அங்கயர்கண்ணி மதுரை மீனாட்சியைப் பாடினார்.  
    “ல்லாம் சிவன் செயலென்றெண்ணி
    மனதில் சாந்த இன்புற்றிருப்போர் பெரியோர்
    இன்ப துன்ப எல்லா உயிரும்
    ஈசன் விளையாட்டு என்று தென்னாட்டுடைய சிவனை எந்நாட்டவர்க்கும் ஈசனைச் சிவகவியில் பாகவதர் பாடினார்.  
    நாற்பதுகள் தொடங்கிப் பக்திப் படங்கள் வளரவும் மலரவும் சிவகவி வழித்தடம் அமைத்துத் தந்தது எனலாம்.  சிவகவியில் 15 பாடல்களில் 8 பாடல்களைப் பக்திப் பாடல்களாக எம்.கே.டி அமைத்தார்.
கடவுளே உனை மறந்து போனாரப்பாஎன்று தெய்வத்திடம் பேசுவதாகப் பாடிய பாகவதர் அடுத்தடுத்த வரிகளில் இன்னும் உண்மையைத் தோலுரித்துக் காட்டுகிறார்.
    “அற்பர்களைப் புகழ்வார்
    நாவால் பொய் மொழிவார்
    தனது வாழ்நாளெல்லாம் பாழ் செய்வார்
    நின் பாவனை செய்தறியார்
    அந்தோ விந்தையிதே
    அறிந்தறிந்து ஆழ்நரகில் உழல்வாரே!
    இவர் சிந்தை திருந்தி உய்ய
    உன்றன் திருவருள் புரியாயோ
சிந்தை திருத்தும் விந்தை செய்யும் கந்தா! உன்றன் திருவருள் அவர்களைத் திருத்தட்டும்என்று பாகவதர்சிவகவியில் பக்தி ரசத்தோடு பாடல்பாடுகிறார்.
    ஹரிதாஸில்கிருஷ்ணா முகுந்தா முராரேஎன்று பார்த்த சாரதியைப் பாடிப் பரவிய பாகவதர் சிவகவியில் ராதையைப் பாடிப் பரவுகிறார்.
    “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
    மாதரசே பிழையேது செய்தேன்சுகுண
    எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ?
    எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோஓடாதே!
    கண்ணை இழந்தவன் நீயோ நானோ?
    கண்ணா நீ வேறு நான் வேறா எவன் சொன்னவன்?
    விண்ணும் மண்ணும் நிறைமுகில் வண்ணனே
    விறுப்பும் வெறுப்பில் பரஞ்சோதிப் பொருளே இன்று
    சிவகவி வெளியான 1942-ஆம் ஆண்டு எம்.கே. தியாகராஜ பாகவதருக்கும் பாபநாசம் சிவனுக்கும் பெரும்புகழ் கிடைத்தமைக்குஅம்பா மனங்கனிந்து கடைக்கண் பார்எனும் பாடல் காரணமாக அமைந்தது.  
    “அம்பா மனங்கனிந்துனது கடைக்கண் பார்
திருவடியினைத் துணையென
வெம்ப நோயற அன்பர் தமக்கருளும்
    கதம்பவனக் குயிலே சங்கரி ஜெகத்
    பைந்தமிழ் மலர் பாமாலை சூடி உன் பாதமலர்   
    பணிந்து பாடவும் வேண்டும்
என்று பாடலின் முதல் ஆறு வரிகளில் குழைந்து நெக்குருகிப் பாடிய பாகவதர், இரண்டாம் பாதியில் வேண்டிய வரத்தைக் கேட்கிறார்.
    “சிந்தையும் என் நாவும் என்னேரமும்
நின் திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதிமயங்கி அறுபகைவர்
வசமாய் அழியாமல் அருள் பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜெதீஸ்வரிஎந்தன்
அன்னையே அகிலாண்ட நாயகி என்“  
என்று பாடிய பாகவதர் நடித்த போது தமிழ்த் திரையுலகம் புதிய தொடக்கத்திற்கு உள்ளாயிற்று.
    பாடல்கள் சிறப்பாக இருந்தால் படம் நூறுநாளைத் தாண்டும் என்பதைப் பாபநாசம் சிவனும், எம்.கே.டி. பாகவதரும் சிவகவியின் மூலம் மற்றுமொரு முறை நிரூபித்தார்கள்.  கேளிக்கை என்பதோடு மட்டுமல்லாமல், உட்கருத்தையும் மனம் விரும்பியபடித் தர முடியும் என்று எம்.கே.டி. பாகவதர் நிலை நிறுத்தினார்.
பாகவதர் பிரபலப்படுத்திய ராகங்கள்
     கர்நாடக சங்கீத ராகங்களைப் பிரபலப்படுத்தியவர் எம்.கே.தியாகராஜ பாகவதர்மன்மத லீலையை வென்றோர் பாடலில்அவர் பாடிய சாருகேசி அதன் பின் தமிழ்த் திரையுலகில் பல இசையமைப்பாளர்களால் எடுத்தாளப்பட்டது.
    “தீன கருணாகரனே நடராஜாநவ்ராஜ் ராகத்தைப் புகழ் பெற வைத்தது.  பாபநாசம் சிவன், எம்.கே. தியாகராஜ பாகவதர், பி. ராமநாதன் கூட்டணி இசையில் பல புதிய முயற்சிகளைத் துணிந்து செய்தது.  
    “வதனமோ சந்திர பிம்பமோசிந்துபைரவியில் ஜொலித்தது.  “வள்ளலைப் பாடும் வாயால்..“ பாடல் செஞ்சுருட்டியில் செவிகளை நிறைத்தது.  “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி“  செஞ்சுருட்டியில் பெரும் புகழ் பெற்றது.
    இசையின் நுண் உணர்வைப்புரிந்து கொள்ளாதவர்களையும் ராக ஆலாபனை, கீர்த்தனை, நிரவல், ஸ்வரம் ஆகியவற்றைப் புரிய வைத்தார்.
    ஒலி வாங்கி இல்லாமலேயே ஆயிரக்கணக்கான இசை ரசிகர்களை அவரது குரல் கட்டிப் போட்டது.
    பாகவதரின் உருவத்தில் பில்வமங்கள், திரு. நீலகண்டர், அம்பிகாவதி, அசோக்குமார் ஆகியோர் ரசிகர்களின் உள்ளுக்குள் உலவத் தொடங்கினர்.
    ஆலத்தூர் வெங்கடேச ஐயரிடம் அவர் கற்ற இசையறிவு, பாபநாசம் சிவனிடம் அவர் பெற்ற கவியறிவு இவையாவும் அவரை ஒப்பற்ற இசை ஆற்றல் உடையவராக மாற்றின.
காவியநாயகனின் கடைசிப் படம்
    கலை இருக்கும் வரை கலைஞன் இருப்பான்.  சிவகவிக்கு அடுத்து, 1944-ஆம் ஆண்டில் ஹரிதாசும், 1948-ஆம் ஆண்டு ராஜமுக்தியும், 1952-ஆம் ஆண்டில் அமர கவியும், 1953-ஆம் ஆண்டு சியாமளாவும், 1957-ஆம் ஆண்டு புது வாழ்வும், வெளிவந்து ரசிகர்களுக்கு இசை விருந்து வைத்தபின் 1959-ஆம் ஆண்டு பாகவதரின் கடைசித் திரைப்படம்சிவகாமிவெளிவந்தது.
    “அற்புத லீலைகளையாரறிவார்
    அகிலாண்ட நாயகனே அரனே
    உந்தன் அற்புத லீலைகளைச் சிற்பரனே
    சிவனே உனதடியேன்
    செய்பிழைகள் பொறுத்தருளும்என்று பாடியபடியே வரும் அப்படத்தோடு பாகவதரின் திரை வாழ்வு முடிந்தது.  
    சிவகாமி திரைப்படத்தில் பாகவதர், பாகவதராகவே நடித்திருந்தார்.  “சிவகாமிபடத்தில், பாகவதர் மீது பொறாமை கொண்ட வில்லன் பாலில் விஷத்தைக் கலந்து தருகிறான்.  விஷம் பாகவதரின் கண் பார்வையைப் பறிக்கிறது.
    பாகவதரின் மனைவியாக ஜி.வரலட்சுமி, பாகவதரைப் பார்த்துக் கண்ணீர் சிந்துகிறார்.  பாகவதருக்கும் ஜி. வரலட்சுமிக்கும் நடைபெற்ற உரையாடலில் பாகவதர் தன் இறப்பை முன் குறிப்பாகத் தருகிறார்.
    தன் மனைவி சிவகாமி தன்னைப் பார்த்து அழுவது பாகவதரின் மென் மனத்திற்குப் பிடிக்கவில்லை.  “சிவகாமி! என் துணைவியான பிறகு நீ கண்ணீர் விட்டு நான் பார்த்ததில்லை.  இப்போதும் பார்க்க முடியவில்லை.  ஆனால் என் கையில் பட்ட உன் கண்ணீர்த்துளி என் நெஞ்சையே சுட்டெரிக்கிறது.  
    கண்போனதோடு என் உயிரும் போயிருந்தால்...“ என்ற வரிகள் வந்தபோது ரசிகர்கள் கதறி அழுதனர்.
    “ஏழிசை மன்னன்என்று யாவரும் பாராட்டத் தமிழகம் எங்கும் நான் சுற்றிவந்த போது நீ என்ன நினைத்தாய்?“ என்று பாகவதர் சிவகாமியிடம் கேட்க, அவர்என்னைப் போன்ற பாக்கியசாலி யாருமில்லை என்று நினைத்தேன்என்று உரையாடல் திரைப்படத்தில் வெளியானதைப் பார்க்கப் பாகவதர் உயிரோடு இல்லை.
    “சிவகாமிபடம் முடிவதற்கு முன்பே பாகவதர் இறந்து போனார்.  இடைவேளையோடு பாகவதர் இறந்து போவதாகக் கதை மாற்றப்பட்டது.
    ஏற்கனவே எடுத்த காட்சியைப் பின்னால் நகர்த்தி, ஜி. வரலட்சுமியின் நினைவில் பாகவதர் வருவதைப்போல் இரு பாடல்கள் இடைவேளைக்குப் பின் அமைக்கப்பட்டன.
    “சிவகாமி! உன்னை மனைவியாகப் பெற்றது  ஒன்றே போதும்! இனி நாம் அனுபவிக்க வேண்டியது என்ன இருக்கிறது?
    பக்தி மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டியதுதான் பாக்கி.  இறைவன் அருளிய இசை அறிவைக் கொண்டு ஏதோ நம்மால் ஆனவரை ஆத்திகத்தைப் பரப்புவதே எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு இறுதி வாக்கு மூலமாகவே அந்த வாக்கியம் அமைந்து விட்டது.
இதயத்தை உலுக்கிய இறுதி நிமிடங்கள்
    பாகவதரின் இறுதிக் கச்சேரி நடந்து பொள்ளாச்சியில்... மனமுருகிப் பாகவதர் பொள்ளாச்சிக் கச்சேரியில் பாடிக் கொண்டிருந்தார்.  ஒரு வயதான சாமியாரும் அந்தக் கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.  கச்சேரி முடிந்ததும் அந்த மனிதர் எம்.கே.டி.யை நெருங்கினார்.
    “பாகவதரே! கச்சேரி நடக்கும் போது கவனித்தேன் உங்கள் கால் வீங்கி இருந்தது.  இது நல்லதற்கில்லை. அதைச் சரி செய்ய நான் சுரைக்காய் சூப் தருகிறேன்; சரியாகிவிடும்என்று சொல்லித்தரப் பாகவதர் அதை அருந்தினார்.
    பொள்ளாச்சி விட்டுச் சேலம் வந்த பாகவதருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.  எம்.. வேணு எனும் படத் தயாரிப்பாளர் உடனே பாகவதரைச் சென்று  கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தார். தன் இறுதி நிமிடம் நெருங்கி விட்டதைப் பாகவதர் உணர்ந்தார். தன் மாணவர் ரத்தினப்பாவை அருகில் அழைத்துதியாக பிரம்மத்தின் கீர்த்தனைகளைப் பாடப்பா கேட்கிறேன்என்று கண்ணயர்ந்தார்.  
    காதுகளில் தியாகராஜருடைய கீர்த்தனைகள் வழிந்து கொண்டிருக்க அவர் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர்... நாவு ஓம் நமசிவாயஎனும் மந்திரத்தை முணுமுணுத்தது.
    “தீன கருணா கரன் நடராஜன்
    திருவருள் தந்த சிதம்பரநாதன்
    நித்ய நிர்மல நிரஞ்சன நீலகண்டன்
    தில்லையில் நாயகன்
    சிவகாமி மணாளன்
    ஸ்ரீ கிருஷ்ணன் முகுந்தன்
    1959 நவம்பர் 1-ஆம் நாள் அதிகாலை 4.30 மணிக்குத் தன் இசைமைந்தன் எம்.கே.தியாகராஜ பாகவதரைத் தன் பொற்பாதத்திற்கு எடுத்துக் கொண்டனர்.
    நாற்பதாண்டுக் காலம் ஏழிசை மன்னனாய் வலம் வந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் உயிர், உடலை விட்டு இறைவனோடு ஐக்கியமானது.
    வாழ்நாள் முழுக்க அவர் பாடிப் பரவிய கதம்பவனக் குயில் ஜகதாம்பிகை அங்கயர்கண்ணி மீனாட்சியும், சிவபெருமானும், கிருஷ்ணரும், முருகவேளும் பாகவதரைத் தனதருகே அழைத்துச் கொண்டார்கள்.
    பாகவதர் இறந்த செய்தி உடனே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப்பட்டது.  அனைத்து நடிகர்களும் கண்ணீர் வடித்தார்கள்.  எஸ். எஸ். ராஜேந்திரனை அழைத்துச் சென்னையில் இறுதி ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
    “பாகவதரின் தந்தை சமாதி திருச்சியில் உள்ளது.  அவரது சொந்த ஊரும் அதுதான். எனவே அங்குதான் அடக்கம் செய்வோம்என்ற உறவினர்கள் சொல்ல, திருச்சி கன்டோன்மென்டில் உள்ள பாகதவர் பங்களாவில் அவரது பூத உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
    நவம்பர் 2-ஆம் நாள் மாலை 4.30 மணிக்குத் திருச்சி சங்கிலியான்டபுரத்தில் தந்தைக்கு அருகே பாகவதர் அடக்கம் செய்யப்பட்டார்.
    நடிகர், பாடகர் என்ற தொழில் நிலையைக் கடந்து தேச பக்தராக, உயர் குணங்கள் கொண்ட மனிதராக வாழ்ந்தவர் எம்.கே.டி.
    “உலகமே ஒரு நாடக மேடை, நாமெல்லாம் நடிகர்கள்என்கிற ஷேக்ஸ்பியரின் கருத்து, சாதாரண மனிதர்களுக்குப் பொருந்தலாம்.  ஆனால் எம்.கே.டி.க்குப் பொருந்தாது.  படத்தில் நடித்த அவர் சொந்த வாழ்வில் நடித்ததில்லை.
    கொலை வழக்கில் மாட்டிப் பாகவதர் சிறை செல்கிறார்.  பல லட்ச ரூபாய் செலவு செய்து அவரை வைத்துப் படமெடுத்துக் கொண்டிருந்த தயாரிப்பாளர்கள், நட்டமாகாதபடி தன் சொத்துக்களை விற்றுப் பாகவதர் பணத்தைத் திரும்பத் தந்தார்.  இரண்டு வருடங்கள், இரண்டு மாதங்கள், பதின்மூன்று நாட்கள் சிறையில் இருந்தபோதும் அவர் யாரையும் நொந்து கொள்ளவில்லை.  விடுதலையான உடன் நேராக வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்று இரு கைகளையும் உயரத்தூக்கி வணங்கிஎல்லாம் உன் செயலப்பாஎன்று பாரத்தை இறக்கிவிட்டுச் சென்றவர் பாகவதர்.
    “மனிதன் கை விட்டாலும் இறைவன் ஒரு போதும் தம்மைக் கைவிடமாட்டான்என்று உறுதியாக நம்பினார் எம்.கே.டி.
    அமரகவிக்குப் பின்னால் அவர் எவ்வளவு கடுமையாக உழைத்தும் படங்கள் பெருவெற்றியடையவில்லை.  சியாமளாவும், புதுவாழ்வும் தோல்வியைத் தழுவின.
    வெற்றி பெற்றவுடன் பெரு மகிழ்வு அடையாமலும், தோல்வி அடைந்தவுடன் துவண்டுவிடாமலும் மலைகுலைந்தாலும் நிலை குலையாமல் அமைதியாக வாழ்ந்தார் எம்.கே.டி.
    புகழின் உச்சிக்குச் சென்று லட்சம் மக்களால் கொண்டாடப்படும், கொலை வழக்கில் சிக்கிச் சிறையில் இருந்தாலும் எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கும்யாவற்றையும் கடந்த நிலைக்கு எம்.கே.டி. சென்று விட்டார்.
    நடந்த நல்லவற்றையும் அல்லவற்றையும் கெட்ட சொப்பனமாகப் பாகவதர் மறந்து விட்டார்.
    “சொப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்ரமண்ய ஸ்வாமியுனை மறந்தார்எனும் பாடல் வரிகளை அவரால் அழகாக அர்த்தத்துடன் பாடி வாழ முடிந்தது.  சிவகவியில் பாகவதர் சொல்வதைப் போல
    “எல்லாம் சிவன் செயலென்றெண்ணி மனதில் சாந்த
    இன்புற்றிருப்போர் பெரியோர்
    இன்பதுன்ப மெல்லாம் ஈசன் விளையாட்டு
    எளியோர்கள் எல்லாம் சகோதரர்
என்று பாகவதர் வாழ்நாளின் இறுதியில் புரிந்து கொண்டார். பாகவதரின் இறுதிக்காலப் பாடல்கள் மாயாவாதத்தை
    “சிவபெருமான் கிருபை வேண்டும்
    அவன் திருவடி பெற வேண்டும்
    வேறென்ன வேண்டும்?
    அவலப் பிறப்பொழிய வேண்டும்
    அதற்கு வித்தாம்
    அவமாயை அகல வேண்டும்
என்று அவமாயை அழிக்கும் அருமை மனிதராகப் பாகவதர் இறுதியில் மாறினார்.
    நாடகத்தின் மூலம் வெளிவந்து, இசையால் அனைவரையும் வசமாக்கிச் சுதந்திர தாகத்தைப் பாடல்களால் ஊட்டி, லட்சக்கணக்கான மக்களால் போற்றப்பட்ட மாகலைஞன் எம்.கே. தியாகராஜ பாகவதர் தமிழ்த்திரையுலகிற்குக் கிடைத்த வரப்பிரசாதம்.  
    இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் தஞ்சை மாரியம்மன் கோவிலில் நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரனைப் பாகவதர் சந்திக்கிறார்.  பாகவதரின் இறவாப்புகழ் பெற்ற திரைக் காவியங்களை நினைவுபடுத்திய எஸ்.எஸ். ராஜேந்திரன்
    “பாகவதரே! உங்களுக்குக் கனகாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசைஎன்று சொல்லப் பாகவதர் அன்போடு மறுத்தவாரே
    “நீங்கள் சொன்னதே தங்கத்தால் அபிஷேகம் செய்தது போலத்தான்என்று நாகரிகமாய் மறுத்துப் பேசுகிறார்.
    “ஏழிசையால் இசை பரப்பி
    ஏற்றமாகப் பண் பரப்பிக்
    கேட்ட மனத்தைக் கிறங்க வைத்துப்
    பாட்டுத் திறத்தாலே பார்போற்றவைத்துப்
    பாசத்தால் யாவரையும் கட்டிப்போட்ட
    இசைக் கலைஞர் எம்.கே.டி.!
    இசை உள்ளவரை இசையின் உள்ளத்தில்
    கட்டாயம் வீற்றிருப்பார்.