நெருக்கடியான வாழ்வியல் நிகழ்வுகளை த் தன் அழகியல் பதிவுகளால் கடக்க வைக்கும் மென்மையான வாழ்வியல் சித்திரங்களை க் கவிதைகளாகப் பதிவு செய்து வருபவர் கல்யாண்ஜி .50ஆண்டுகள் ஆகிறது அவர் எழுதத் தொடங்கி .யாரும் எழுதாத எளிய மனிதர்களின் வாழ்வியல் சித்திரங்களை க் கவிதைகளாகப் பதிவுசெய்துவரும் கல்யாண்ஜிமுகநூல் பரப்பில் படைத்த 50 கவிதைகள் நிறைய வாசகர்களால் விரும்பவும் பகிரவும் பட்டன .மேலும் பதிப்பக நிறுவனர் சிவசு ,கட்டளை கைலாசம் அய்யா ,திருமதி வேலம்மாள் ,நான் ஆகிய நால்வரும் பாளையம்கோட்டை ரயில்வே சாலைத் தெருவிலுள்ள சிவசு அய்யா வீட்டில் கவிதை வாசித்தல் நிகழ்வை நடத்தினோம் .பூத்துக்கிடந்த செம்பருத்திப் பூக்கள் சாட்சியாக கல்யாண்ஜிமுகநூல் கவிதைகள் வாசிப்பு நிகழ்வு 3மணி நேரம் நடைபெற்றது .,திருமதி வேலம்மாள்,கல்யாண்ஜியின் தேக்கும் பூக்கும் எனும் கவிதையால் தொடங்கி வைத்தார் .வாசித்து முடித்த த்ததும் அது எங்களுக்குள் எழுதிய கவிதை குறித்து நிறையப் பேசினோம் .விஸ்வரூபம் குழந்தைகள் சுட்டு விரலை சுடு விரலாக மாற்றிய கவிதை ,பூனைகள் தொடர்பான கவிதைகள் ,மனநிலை பாதிக்கப் பட்டவன் கவிதை ,என மென்மையைக் கவிதையை க் .,திருமதி வேலம்மாள்,வாசித்து முடிக்க ,நான் அடுத்து வாசித்தேன் .குடித்து மிச்சம் வைத்த தேனீர் கவிதை நால்வரையும் பாதித்தது .லாடம் கவிதை நன்றாக இருந்தது .கார்சேரி அத்தை குறித்த கவிதை தூக்கு குறித்த அதிர்வலைகளை எங்கள் நால்வருக்கும் தந்தது .இந்து ஆசிரியர் சிவசுவின் கட்டளை அய்யாவின் பத்தமடை ஆசிரியர்களை முன்னிறுத்தியது .அருமையான கவிதைகள் வாசித்த அருமையானநாள் .
This entry was posted
at 10:39
. You can follow any responses to this entry through the
.