என்ன கவிதை சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

Posted

மொட்டை மாடிக் கவளச் சோறு
வேனிற்கால மண்பானை நீர்
முருகன் தியேட்டர் கல் முறுக்கு
ஆனித்தேர் வடம்
பதினெட்டாம் பெருக்கு நதி
தசரா காளி வேடம்
ஜீவ ஜோதி மிட்டாய்
வாழைப் பழம் போட்டு
அடித்துத் தந்த பாக்கெட் ஐஸ்
கை விட்டுப் பரந்த
 சி .பி .வாடகை சைக்கிள்
கலர்க் கோழிக் குஞ்சு
இப்படிப்பட்ட பட்டியலில்
 இன்னமும் உண்டு சொல்லாத பலவும்
இறுகிய கான்க்ரீட்டாய்
இதயம் மாறிய பின்
இளக்கம் பற்றி
என்ன கவிதை வேண்டிஇருக்கிறது ?

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி


This entry was posted at 09:22 . You can follow any responses to this entry through the .

0 comments