குற்றாலம்

Posted



எங்கள் கல்லூரி ஆசிரியர் அலுவலர் இணைந்து குற்றாலம் சென்றோம் .ஆலங்குளம் தாண்டிய உடன் சாரல் கொட்டியது .அடர்ந்த கறுமை நிறச்சாலைகளில் தெறித்து விழுந்த மழைத்துளி  அங்கு வேறு பரிமாணம் எடுத்திருந்தது .பழைய குற்றாலம் பச்சை குத்துகிற உழைப்பாளிகள் விரித்து வைத்த துண்டுகளுடன் இன்னும் அழகாக இருந்தது .வாகனங்களை மறித்து விற்கிற நுங்கும் பலாச் சுளைகளும் தேனாக இனித்தன .நான்கு மடிப்புகளாக மடித்திருந்த மலை யிலிருந்து  வெண்பிரவாகமாய் அருவி கொட்டியது .சீப்புகளைப் போன்று அழகாக வெட்டப்பட்ட மாங்காய் துண்டுகள் அந்த மலைப் பயணத்தை ரம்யமனதாக ஆக்கியது .
முக்கிய அருவியில் வெள்ளம் கொட்டியது .மலையிலிருந்து மிளா விழுந்ததாக தகவல் பரவியது 
அருவிக் கரையில் அணி வகுத்திருக்கின்றன வரிசையாய் கடைகள் .திருக்குற்றாலநாதர் குறும்பலா ஈசராக கரையோரத்தில் அமர்ந்திருக்கிறார் .உள்ளுக்குள்
அருவிச் சத்தம் சல சலத்தது .குட்டியோடு வானரங்கள் அருவியை ரசித்தன .திரிகூடப்பக் கவிராயர் மனதுக்குள் குறவஞ்சி பாடினார் .ரசிகமணி டி .கே .சி .நினைவு நூலகம் நெஞ்சை நிறைத்தது .சித்திர சபை விசித்திர வண்ணங்களை மனதில் பரப்பியது .பிரானூர் நார்சந்திப்புச் சாலையின் சிகப்பு நிறப் பேருந்துகளும் சிப்ஸ்  கடைகளும் கேரளாவை நினைவு படுத்தின .
அருவி கண்ட மனம் குருவி கண்ட மனமாய் பறந்தது

சௌந்தர மகாதேவன் ,திருநெல்வேலி 











This entry was posted at 09:27 . You can follow any responses to this entry through the .

0 comments