செல்பேசிக் கோபுரத்திலோ
காற்றாலை கோபுரத்திலோ
பணியாற்றுபவனைப் பார்த்து
வானம் தொட்டுவிடும் தூரம்தான் என்று
வகுப்பெடுக்க முடியாது ,
விழுந்தால் எலும்பு கூட எஞ்சாது .
அரை ஜான் வயிற்றின் ஓலத்திற்காக
பனை உயரம் வாழ்வைப் பணயம் வைக்கிறான்
எனவே உயரத்தில் இருப்பவனெல்லாம்
உயரத்தில் இருப்பவனல்ல
உயரம் கூட ஒருவகையில் துயரம்தான்
சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி
This entry was posted
at 06:42
. You can follow any responses to this entry through the
.