மரம் இன்று சௌந்தர மகாதேவன்

Posted



அறுக்கப் படுவதற்காக அழும்
மரத்தின்  மரண ஓலம்
 மின்சார ரம்பங்களுக்கு
என்று கேட்டது ?
கூடுகளையும் குஞ்சுகளையும்
தாங்கிய மரம் இன்று
தன்னைக் கூடத் தாங்கத் திறனற்றுத்
தளர்ந்து கிடக்கிறது .
கிட்ட நின்றவனே
வெட்ட வரும்போது
திட்ட என்ன இருக்கிறது ?
சரிந்து மடிவதைத் தவிர .


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 

This entry was posted at 06:39 . You can follow any responses to this entry through the .

0 comments