,வாசுதேவ நல்லூர் மகாகவிபாரதியார் பொறியியல் கல்லூரி வள்ளுவ பாரதி தமிழ்ப் பேரவை

Posted

தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அப்பால் போய்க்கொண்டிருக்கும் நடப்பு நாளிலே
திருநெல்வேலி மாவட்டம் ,வாசுதேவ நல்லூர் மகாகவிபாரதியார்    பொறியியல் கல்லூரியில் இருந்து  கல்லூரிமுதல்வர் திரு பாலாஜி பேசினார் . 

   திருவள்ளுவர் மகாகவி பாரதி பெயரில் நம் கல்லூரியில் வள்ளுவ பாரதி தமிழ்ப் பேரவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் .
மாணவர்களின் ஆர்வம் வியக்க வைத்தது .கல்லுரி நிறுவனர் முனைவர் ராமையா முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் .
வளாகம் தமிழ் மயமாக இருந்தது .
சென்னை கடற்கரையில் உள்ளது போல் அருமையான பாரதி சிலை .அமர்ந்த கோலத்தில் திருவள்ளுவர் சிலை ,சுவாமி விவேகானந்தர் சிலை ,எம் .ஜி .ஆர் .சிலை .
எங்கும் தமிழ்
மணம் 

.மாணவர்கள் வேட்டி கட்டியும் ,மாணவியர் சேலை உடுத்தியும் அருமையான பட்டிமன்றம் நடத்தினர் .
அத்தனைப் பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ்ப் பேரவை தொடங்கத் தமிழக அரசு ஆணை பிறப்பித்தால் நன்றாக இருக்குமே .
 .அந்த ,வாசுதேவ நல்லூர் மகாகவி பாரதியார்  பொறியியல் கல்லூரிமுதல்வர் திரு பாலாஜிஅவர்கள் மகாகவி பாரதியாரின் பேரன் .
வாழ்த்துகளுடன் நெல்லை திரும்பினேன் .

This entry was posted at 07:12 . You can follow any responses to this entry through the .

0 comments