ஒரு பக்கம் குற்றாலச் சாரலின் தாலாட்டு .இன்னொரு பக்கம் ஆனித் திருவிழாவில் திக்கு முக்காடிப் போயிருக்கும் நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கு .பாளை வ .உ .சி .விளையாட்டு அரங்கத்தில் அறிவுத் திருவிழாவாய் நெல்லை புத்தகத் திருவிழா .இதமான தென்றலின் சுகமான வருடலில் பாளை நனைகிறது .விரிந்த ஆகாயம் வியத்தலையும் தாண்டியதாயிற்றே .
அல்வா உண்டு தூர எறிகிற எண்ணெய்அப்பிய அடர்ந்த பச்சை இலைத் துண்டைக் கூட ரசிக்கும் ரசிகர் கூட்டம் உண்டு நெல்லையில் .தடம் பதித்த படைப்பாளிகள் வரும்போது ரசிக்காமல் இருப்பார்களா ?
மதுரம் காபியோடு வள்ளியுடனும் முத்து குமாருடனும் பேசிக்கொண்டிருக்கும் தி .க .சி .நதியைப் பற்றிப் பேசத் தொடங்கி அக்கரைக்கும் இக்கரைக்கும் பரிசல் ஓட்டும் வேடிக்கை மனிதர்களைக் காட்சிப்படுத்தி கவிதை படைத்து வரும் வண்ணதாசன் கவிதைகளுக்குள் உருகி ஆர்பரித்த தமிழருவி மணியன் ,பாளை .பற்றிப் பேசத் தொடக்கி ரேனிஸ் ஐயர் தெரு உள்
நெருங்கி அற்புதமான வரலாற்று உரையைப் பொழிந்த அறிஞர் தொ .ப .,சிரித்த முகத்தோடு அழுத்தமாகப் பேசிய நாவலாசிரியர் பிரபஞ்சன் ,எளிமையாகப் பேசிய பவா செல்லதுரை என அடுத்தடுத்து உரைப் பொழிவை கண்ட கண்கள் பாக்கியம் செய்தன .கூட்டம் கூட்டமாய் புதுப் புனல் அரங்கில் கோவை ஞானியின் 'ஏன் வேண்டும் தமிழ்த் தேசியத்தையும் 'உயிர்மை அரங்கில் சுஜாதாவையும் மனுஷ்ய புத்திரனையும் என் சி பி ச் அரங்கிலே அறம் நாவலையும் விகடன் அரங்கில்கல்கியின் பொன்னியின் செல்வனையும் வாங்கிச் செல்லும் வாசகர்களால் பாளை .இன்னும் அழகாகத் தெரிந்தது
This entry was posted
at 11:32
. You can follow any responses to this entry through the
.