கடையநல்லூர் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் கவி இன்பம் 22.6.13

Posted



நட்பு என்பது நடிப்பன்று ;அது நாடித் துடிப்பு .நான் வகுப்பில் அடிக்கடிப் பயன்படுத்தும் பொன்மொழி .
கடையநல்லூர் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்குச் சென்றிருந்தேன் .அஞ்சல் துறையில் பணி நிறைவு பெற்ற நண்பர் இப்ராகிம் அவர்கள் அழகாக ஒழுங்குபடுத்தி இருந்தார் .ஆலங்குளம் தாண்டிய உடன் பொதிகைச் சாரல் மழையாய் கொட்டியது .தென்காசி தாண்டிய உடன் இரு பக்கமும் வானுயர்ந்த மருத மரங்களும் ,பச்சைப் பசெலென்ற மருத நிலங்களும் குற்றாலக் குறவஞ்சியை நினைவு படுத்தியது .இடைகால் கடந்தபோது கலா ப்ரியா அய்யாவின் கவிதைகளை மனம் அசை போட்டது .நல்ல காற்றோட்டத்தில் கடையநல்லூர் பேருந்து நிலையம் .சாரல் பன்னீர் தூவிக் கொண்டிருந்தது .
சேயன் குடும்பத்தைச் சார்ந்த அன்பு நண்பர் பேருந்து நிலையம்


வந்திருந்தார் 
பரபரப்பான  சாலைகளைக் கடந்து நண்பர் சேயன் வீட்டிற்குள் அடிஎடுத்து வைத்தோம் .நல்ல தமிழ் நூல்கள் வரவேற்றன . வனூயர்ந்த மினார்களைக் கொண்ட பள்ளிவாசல்களில் பாங்கொலி அற்புதமாய் கேட்டது . நிகழ்ச்சி நடந்த பள்ளி பழமையானது . அனுபவம் வாய்ந்த பெரியோர் 50 பேர் அந்த அரங்கில் கூடிஇருந்தனர் . கடையநல்லூர் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் செயலாளர் சேயன் இப்ராகிம் நல்ல நாவலர் தமிழ் ஆர்வலர் .''எண்ணப் பறவை  ''அவரது நல்ல நூல் .நெல்லை ஜெயந்தாவின் முதியோர் இல்லக் கவிதையால் சேயன் இப்ராகிம் நிகழ்வைத் திறந்தார் . கம்பர் ,இளங்கோ ,திருவள்ளுவர் ,திரிகூடராசப்பக் கவிராயர் ,பாரதி ,,பாரதிதசனார் ,கவிமணி ,கண்ணதாசன் , கசியாநந்தன் கவிக்கோ ,கல்யாண்ஜி ,கலாப்ரியா ,ஆகியோரின் கவிதைக்குள் பயணித்தோம் .அழகாக ரசித்தனர் .மகரிப் நேரம் வரை கவி இன்பம் நீடித்தது .
ரசிக்கிற உள்ளங்கள் இருக்கிற வரைக்கும் தமிழ்
புசிக்கிற பறவைகள் வானில் பறக்கும்

                                                           சௌந்தர மகாதேவன் ,திருநெல்வேலி 

This entry was posted at 02:31 . You can follow any responses to this entry through the .

0 comments