இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய விருது வழங்கும் விழா திருநெல்வேலி

Posted



தற்செயல் நிகழ்வுகள் கல்வெட்டுக்களாய் மனதில் பதிந்து விடுவதுண்டு.அன்றும் அப்படித்தான் நடந்தது.எங்கள் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.முகம்மது சாதிக் அவர்கள் தொலைபேசியில் கேட்டுக் கொண்டபடி திருநெல்வேலி ஆரியாஸ் உணவகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சென்றேன்.மிகப் பெரிய அந்த அரங்கம் நிரம்பி வழிந்தது.முன்னர் அமரச்சொல்லி நீதிமன்றக் கிளையின் மேலாளர் திரு.நாகூர்மீரான் கேட்டுக் கொண்டார்.முதல் வரிசையில் சிங்கம் போன்று அமர்ந்திருந்தது என் ஆசிரியர் திரு.பர்னபாஸ் அவர்கள்.சில நேரங்களில் சிலரைச் சந்திப்பதற்காகவே சில கணங்களைக் காலம் நிறுத்தி வைக்கிறது.நான் எண்பதுகளில் பாளை.தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி மாணவனாக அடிஎடுத்து வைத்ததும் சகவகுப்புத் தோழராக இன்று இசையமைப்பாளராகத் திகழும் விஜய் ஆண்டனி அங்கே வந்து சேர்ந்தார்.தேசிய மாணவர் படையில் சேர வேண்டும் என்ற ஆவல் தோன்றக் காரணம் ஆசிரியர் திரு.பர்னபாஸ் அவர்களின் ஆறடி உயர கம்பீரஉருவம்,தெளிவான அழுத்தமான தமிழ் உச்சரிப்பு,இன் செய்து முழுக்கை சட்டை போட்டு கைகளைப் பின்னால் கட்டியபடி அவர் பள்ளி வளாகத்தில் வந்துநின்றால் நாங்கள் பயந்து ஓடியதுண்டு. தேசிய மாணவர் படையில் நான் சேரக்காரணமும் அவர்தான்.என்.சி.சி.சீருடையில் காலை இளம்வெயிலில் அவரைப் பார்ப்பது அழகாக இருக்கும்.பாரதி மீசை,மேல் நோக்கி சீவிய தலைக்கேசம்.பரடுக்கு தாமதமாய் வந்தால் அலுமினியப் பூண்போட்ட கம்பால் மிரட்டுவாரே அன்றி யாரையும் அடித்ததில்லை.சத்தமான குரலை எழுப்பி என்.சி.சி ஆணைகளை அவர் பிறப்பிக்கும் கம்பீரத்தை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். காக்கி சீருடை கசங்கி இருந்தால் அவர் கண்கள் சிவக்கும்.புளி மூட்டையில் வச்சீருந்தையா? என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் என் கண்களில் தாரைதாரையாய் கண்ணீர் வழியும்.இரக்கப்பட்டு போடே என்பார்.ஒவ்வொரு மாணவனாய் உற்றுக் கவனிப்பார்.மணல் மூட்டையை அடுக்கி தூப்பாக்கிசுடும் பயிற்சிக்காக எங்களை சேவியர் கல்லூரி மைதானத்திற்கு அன்று அழைத்துச் சென்றிருந்தார்.ஒரு வாரம் பயிற்சி வேறு அளித்திருந்தார்.நிகழ்வுகள் முடிந்து நான் சுட்ட இலக்கு அட்டையைக் கொண்டு வரச்சொல்லிப் பார்த்தார்.என் இலக்கு அட்டையில் ஒரு குண்டுகூடப் பாயவில்லை.பக்கத்து மாணவனின் இலக்கு அட்டையில் குறிதவறாமல் சுட்டிருந்தேன்.இனிமேல் என்.சி.சி பக்கம் வந்தே நடப்பதே வேறு என்று விரட்டி வீட்டார்.அந்த ஆசானை இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து திருநெல்வேலி ஆரியாஸ் உணவகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய விருது வழங்கும் விழாவில் சந்திக்க வைத்தது வாழ்வில் மறக்க இயலாத தருணம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூத்த வாடிக்கையாளர் விருதினை என் ஆசான் திரு.பர்னபாஸ் அவர்கள் பெற அவருக்கு அடுத்து கல்லூரியின் சார்பில் அதே மேடையில் என் ஆசிரியப் பெருந்தகை முன்னிலையில் அப்பரிசினை நான் பெறக்காரணமாய் அமைந்த நீதிமன்றக் கிளை மேலாளர் திரு.நாகூர்மீரான் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்.எழுபத்தைந்து வயதிலும் அதே முறுக்குமீசை அதே நிமிர்ந்த நன்னடை..என்ஆசானே நீங்கள் எப்போதும் முன்மாதிரி.படத்தில் அவர் முன்வரிசையில் அமர நான் அவருக்குப் பின்னால்.. என்றும் அவர் பின்னால்...

சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி




திருச்செந்தூர் கடல்நீல அதிசயம் சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி

Posted










கடல்நீல அதிசயம்.நீளஆச்சர்யம்.அதன் அகண்டபரப்பு விரிதலைப் புரிதலாக்குகிறது.
புதிய உலகிற்குள் நமைப் புரட்டி நகர்த்துகிறது.ஏதோ சொல்ல வந்து தயக்கத்தால் சொல்லாமல் திரும்பி செல்லும் அலை தயக்கத்தின் அடையாளம்.அகமும்புறமும் எப்படி மனதின் மாயத்தோற்றமோ அதேபோல் அலையும் அதன் தயக்கநிலையும் சமுத்திரத்தின் மாயத்தோற்றமே.வானம் தொட்டுவிடும் தூரம்தான் கடலின்தூரப்பரப்பில்.அலைமேல் அலையும் கலையாய் ஏற்ற இறக்கம் காட்டும் படகுகள்.ஆக்ரோஷம் இல்லாக் குழந்தைக் கடல்களாக திருச்செந்தூர் கடலும் ராமேஸ்வரம் கடலும் எப்போதும் தெரிகின்றன.
திருச்செந்தூர் கடல் எப்போதும் போல் அலையை வீசிய கலைப்பிம்பமாய் இருந்தது.இடதுபக்கம் செந்தூர்முருகன் திருக்கோவில் வானை முத்தமிடும் ராஜகோபுரம்,வலதுபுறம் மின்னும் தரைநட்சத்திரமாய் தொலைவில்மணப்பாடு கலங்கரைவிளக்கு.காலடி புதைந்த மண்பரப்பு.சமீபத்திய அழகியலை முன்வைத்து நகரும்வெண்பழுப்பு நிறக்குதிரை.கடலால்எப்படிமுடிகிறது.? அனைவரையும் மகிழவைக்க? சிறுவர்கள் ஆங்காங்கே ,மணல்வீடு கட்டிக் கொண்டிருந்தனர்.இளம்சோடிகள் வழக்கம்போல் எல்லோருக்குள்ளும் தனியாக ரகசியம் பேசினர்.அனைவரையும் இணைக்கும் சப்தநூலாய் தேங்கா மாங்காய் பட்டாணி விற்கும் சிறுவர்கள்,பஞ்சுமிட்டாய் விற்கும் சிறுவர்கள்.கிழிந்து கிடந்தன கிளிசல்கள் மண்பரப்பெங்கும்.அந்தநாளின்நீட்சிகடலில்கழிந்ததில்எனக்கும் என்மகனுக்கும் மகிழ்ச்சிதான்.இவுள்ளவு தண்ணீரை யார் கொண்டுவந்து இங்கே  ஊற்றினார்கள்? என்று கேட்டான்.மணலை துளைத்துக் கொண்டு நண்டுநகர்வது அவனுக்கு வியப்பாக இருந்தது.கடலோரக்கவிதை சத்தியராஜ் மாதிரி கடலுக்குள்ஒருவன்பாய்ந்து வெண்சங்குடன் வந்து அதற்கு விலை சொல்லிக் கொண்டிருந்தது அவனுக்குவியப்பாய் இருந்தது.எல்லாவற்றையும் பார்த்தபடிகடல்அலைகளைவீசி அழகாய்அவனோடுவிளையாடியது.வண்ணநிலவனின் கடல்புறத்தில் பிலோமியைப் போல.கடல்எல்லோருக்கும் ஒன்றாய் தண்மையை தனித்தன்மையாய் கொண்டு அலைவீசிக் கொண்டிருக்கிறது ஆண்டான்துகளாய் யுகம்யுகமாய்.
கண்கள் விரியப் பார்த்த என்மகனின் கண்களிலும் கடல் தெரிந்தது வீட்டுக்கு வந்தபின்னும்.நதிகளைத் தனதாக்கி வளங்களோடு அலைவீசும் அந்த திருச்செந்தூர்கடல் ஏதோ ஒன்றை சொல்வதற்குயுகம்யுகமாய் அலைஅனுப்பிக் கொண்டே இருக்கிறது கடல்மொழி தெரியாமல் நாமும் கால்கழுவிக்கொண்டே இருக்கிறோம் நாமும்.


சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி



சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி உத்தர்கண்ட் மக்களுக்கு உதவி

Posted







உத்ரகண்ட் வெள்ளத்தில் மூழ்குகிறது
மக்கள் துயரத்தில் மிதக்கிறார்கள்
நிறைய மக்களைக் காணவில்லை
அவர்களின் துயர் துடைக்கும்
கூட்டு முயற்சியைத் தொடங்கினோம்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
அம் முயற்சியை தென் மாவட்டத்தில் தொடங்கியது
இரண்டே நாட்களில் அத்தனை வகுப்புகளிலும்
ஏறி இறங்கினோம் ஆங்கிலத் துறைப் பேராசிரியர் முகமது ஹனீப்
தலைமையில் மாணவர்கள் பம்பரமாய் சுழன்றனர்
ரூ .65000 மதிப்புள்ள பொருட்கள் குவிந்தன .
அஞ்சல்துறை அப் பொருட்களை இலவசமாக உத்ரகண்ட்
அனுப்பி வைத்தது
மாணவ சமுதாயம்
மகத்தான செயல்களைச் செய்யும்
செய்திருக்கிறது
22 பெட்டிகள் அனுப்பிய நிறைவு
அனைவர் மனதிலும்

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

இன்றுடன் தந்தி சேவை நிறைவு !சௌந்தர மகாதேவன் ,திருநெல்வேலி

Posted




தந்தி ..என்ற சொல் நம் வாழ்வில் மறக்க இயலா முத்திரைச் சொல் . விரைவு என்ற சொல்லின் பொருளும் அதுதான் . தந்தி ஆபிஸ் ஊழியர் எங்கள் தெருவுக்கு வந்து சென்ற பின்
 நிறைய வீடுகளில் அழுகுரல் கேட்டதுண்டு .
ஆண்டாளம்மா மகன் ராணுவத்தில் எல்லைப் போரில் இறந்துபோன செய்தி வந்தது தந்தியில்தான் நல்ல செய்தியைக் கொண்டுவந்தால் இரண்டு ரூபாய் அன்பளிப்போடு சிரித்தபடி செல்லும் தந்திக்கார ராசுக் குட்டி அண்ணன் ஆண்டாளம்மா வீட்டிலே இருந்து இறுகிய முகத்தோடு விருட்டென்று வெளியேறி ராலி மிதி வண்டியை உருட்டியபடி தலை குனிந்தபடி சென்றதும் அதன் பின் ஆண்டாளம்மா வீட்டில் பிரளயம் நடந்ததும் இன்றும் நினைவில் இருக்கிறது . மகன் உடல் கூடப் பார்க்க முடியா அந்தத் தாய் அழுது அழுதே ஒரு மாதத்தில் இறந்து போனதும் தூக்கிப் போடக் கூட ஆள் இல்லாமல் தெருவில் உள்ளவர்கள் தூக்கிப் போட்டதும் 
குலை நடுங்க வைத்த சம்பவங்கள் . அதிலிருந்து ராசுக் குட்டி அண்ணன் எங்கள் தெருவுக்குள் வந்தால் ஈரக் குலை நடுங்கும் .
1993 டிசம்பர் கடைசியில்  ராசுக் குட்டி அண்ணன் எங்கள் வீட்டின் முன் மிதி வண்டியை நிறுத்தினார் .
சேவியர் கல்லுரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களவை . மிதிவண்டி கேரியரிலிருந்து தந்தியை எடுத்தார் .
குலை நடுங்க வைத்த சம்பவங்கள் . அதிலிருந்து ராசுக் குட்டி அண்ணன் எங்கள் தெருவுக்குள் வந்தால் ஈரக் குலை நடுங்கும் .
1993 டிசம்பர் கடைசியில்  ராசுக் குட்டி அண்ணன் எங்கள் வீட்டின் முன் மிதி வண்டியை நிறுத்தினார் .
சேவியர் கல்லுரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களவை . மிதிவண்டி கேரியரிலிருந்து தந்தியை எடுத்தார் . ஆண்டாளம்மா வீட்டு சம்பவம் மனதில் நீழலாடியது . மகாதேவன் தம்பி உங்களுக்கு போனோகிராம் தந்தி டெல்லியிலிருந்து வந்திருக்கிறது என்றார் ராசுக் குட்டி அண்ணன். காரணம் புரியாமல் தலை சுற்றியது . தம்பி உங்களுக்கு தேசிய விருது கெடச்சிருக்காம் சனவரி 12ல பிரதமர் கையாலே வாங்கப் போகணுமாம் என்றார் . எதுவும் பேசத்தெரியவில்லை .
அம்மாவிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு அடுத்த தந்தி தர நகர்ந்தார்
தந்தி என்பது வெறும் தந்தியல்ல உருக்கி வைத்த உணர்வின் நெகிழ்வுத் தாள் .
ஆண்டாளம்மா கதைபோல் மகாதேவன் கதைபோல் ஆயிரமாயிரம் கதைகளுண்டு அந்த ஒற்றைத் தந்தித் தாளுக்குள் .
……………………………………………………………………………………………………………………………………….. .
இன்றுடன் தந்தி சேவை நிறைவு!

கடந்த 160 ஆண்டுகளாக இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த தந்தி சேவை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் சேவை, இரவு 9 மணியுடன் முடிவுக்கு வருகிறது. திங்கள்கிழமையிலிருந்து இச்சேவை இருக்காது. கடைசி நாளான இன்று தந்தி கொடுக்க வருபவர்களை வீடியோ மூல்ம் படம் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Vikatan
…………………………………………………………………………………………………………………………………………………………
சௌந்தர மகாதேவன் ,திருநெல்வேலி