திருச்செந்தூர் கடல்நீல அதிசயம் சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி

Posted










கடல்நீல அதிசயம்.நீளஆச்சர்யம்.அதன் அகண்டபரப்பு விரிதலைப் புரிதலாக்குகிறது.
புதிய உலகிற்குள் நமைப் புரட்டி நகர்த்துகிறது.ஏதோ சொல்ல வந்து தயக்கத்தால் சொல்லாமல் திரும்பி செல்லும் அலை தயக்கத்தின் அடையாளம்.அகமும்புறமும் எப்படி மனதின் மாயத்தோற்றமோ அதேபோல் அலையும் அதன் தயக்கநிலையும் சமுத்திரத்தின் மாயத்தோற்றமே.வானம் தொட்டுவிடும் தூரம்தான் கடலின்தூரப்பரப்பில்.அலைமேல் அலையும் கலையாய் ஏற்ற இறக்கம் காட்டும் படகுகள்.ஆக்ரோஷம் இல்லாக் குழந்தைக் கடல்களாக திருச்செந்தூர் கடலும் ராமேஸ்வரம் கடலும் எப்போதும் தெரிகின்றன.
திருச்செந்தூர் கடல் எப்போதும் போல் அலையை வீசிய கலைப்பிம்பமாய் இருந்தது.இடதுபக்கம் செந்தூர்முருகன் திருக்கோவில் வானை முத்தமிடும் ராஜகோபுரம்,வலதுபுறம் மின்னும் தரைநட்சத்திரமாய் தொலைவில்மணப்பாடு கலங்கரைவிளக்கு.காலடி புதைந்த மண்பரப்பு.சமீபத்திய அழகியலை முன்வைத்து நகரும்வெண்பழுப்பு நிறக்குதிரை.கடலால்எப்படிமுடிகிறது.? அனைவரையும் மகிழவைக்க? சிறுவர்கள் ஆங்காங்கே ,மணல்வீடு கட்டிக் கொண்டிருந்தனர்.இளம்சோடிகள் வழக்கம்போல் எல்லோருக்குள்ளும் தனியாக ரகசியம் பேசினர்.அனைவரையும் இணைக்கும் சப்தநூலாய் தேங்கா மாங்காய் பட்டாணி விற்கும் சிறுவர்கள்,பஞ்சுமிட்டாய் விற்கும் சிறுவர்கள்.கிழிந்து கிடந்தன கிளிசல்கள் மண்பரப்பெங்கும்.அந்தநாளின்நீட்சிகடலில்கழிந்ததில்எனக்கும் என்மகனுக்கும் மகிழ்ச்சிதான்.இவுள்ளவு தண்ணீரை யார் கொண்டுவந்து இங்கே  ஊற்றினார்கள்? என்று கேட்டான்.மணலை துளைத்துக் கொண்டு நண்டுநகர்வது அவனுக்கு வியப்பாக இருந்தது.கடலோரக்கவிதை சத்தியராஜ் மாதிரி கடலுக்குள்ஒருவன்பாய்ந்து வெண்சங்குடன் வந்து அதற்கு விலை சொல்லிக் கொண்டிருந்தது அவனுக்குவியப்பாய் இருந்தது.எல்லாவற்றையும் பார்த்தபடிகடல்அலைகளைவீசி அழகாய்அவனோடுவிளையாடியது.வண்ணநிலவனின் கடல்புறத்தில் பிலோமியைப் போல.கடல்எல்லோருக்கும் ஒன்றாய் தண்மையை தனித்தன்மையாய் கொண்டு அலைவீசிக் கொண்டிருக்கிறது ஆண்டான்துகளாய் யுகம்யுகமாய்.
கண்கள் விரியப் பார்த்த என்மகனின் கண்களிலும் கடல் தெரிந்தது வீட்டுக்கு வந்தபின்னும்.நதிகளைத் தனதாக்கி வளங்களோடு அலைவீசும் அந்த திருச்செந்தூர்கடல் ஏதோ ஒன்றை சொல்வதற்குயுகம்யுகமாய் அலைஅனுப்பிக் கொண்டே இருக்கிறது கடல்மொழி தெரியாமல் நாமும் கால்கழுவிக்கொண்டே இருக்கிறோம் நாமும்.


சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி



This entry was posted at 00:44 . You can follow any responses to this entry through the .

0 comments