சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா 13.8.13
நாறும்பூநாதன் வந்தார்.எவ்வித செயற்கைத்தனமும்
இல்லாமல் இயல்பாகப் பேசினார்.மண் சார்ந்த அவர் கதைகள் மீது எப்போதும் ஈர்ப்பு
உண்டு.ஜவகர் திடலில் அமர்ந்துகொண்டு வேர்க்கடலை பொட்டணம் தின்றுகொண்டுகூட அவர்
கதைகளை வாசித்துவிட முடியும்.அவர் பத்திரங்கள் நமக்கு வெகுநெருக்கமானவை.ஒரு மணி
நேரம் பேசினார். புதுமைப்பித்தன்,வண்ணதாசன்,உதயசங்கர்,கு.அழகிரிசாமி,கீரனூர்
ஜாகிர் ராஜா,தோப்பில் முஹமது மீரான் என்று அவர் பயணத்தைத் தொடங்கியபோது மாணவ
மாணவியர் அவரோடு கதைவெளியில் பயணமாயினர்.சீதக்காதி தமிழ்ப் பேரவை கதைவெளியில்
தொடக்கம் கண்டது.நம் கல்லூரியில் பயின்ற சுகா குறித்தும் அவருடைய மூங்கில் மூச்சும்
குறித்துப் பேசினார்.தாமிரா கதைகள் குறித்து பேசினேன்.படைப்பாளியோடு கதைவெளியில்
பயணிப்பது சுகமானது.
This entry was posted
at 10:18
. You can follow any responses to this entry through the
.