மலேசியாவில் 12வது உலகத் தமிழ் இணைய மாநாடு

Posted


Inaiya-Manadu-Group-Feature
கோலாலம்பூர், மார்ச் 24 – உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு, 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது.
மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் புலம், தகவல் தொழில்நுட்ப நடுவம் ஆகியவற்றுடன் இணைந்து திதியான் டிஜிட்டல் திட்டத்தின் ஆதரவுடனும் இம்மாநாடு நடைபெறுகிறது.
இந்த தகவல்கள் கடந்த வெள்ளிக்கிழமை மார்ச் 22ஆம் தேதி மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டன.
கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் தமிழர்களிடையே பரவும் வகையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தமம் அமைப்பு உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தி வருகிறது.
உத்தமம் உலகத்தமிழர்களை இணையத்தின் வாயிலாக இணைப்பதில் வெற்றி கண்டுள்ளது.
இதுவரை உலகளாவிய எட்டு மாநாடுகள்
இது வரை எட்டு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகளில் முன்னணிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும், தமிழகத்தில் மூன்று மாநாடுகளை தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தமம் நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த ஆண்டு கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மேலாண்மை கண்காணிப்பு நடுவத்தில், வரும் ஆகஸ்டு 15 முதல் 18 வரை  “12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2013”ஐ நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.
உத்தமத்தின் தலைவர் சி. ம. இளந்தமிழ் (படம்) அவர்கள், மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார். உத்தமம் அமைப்பின் முன்னாள் தலைவர் திரு மணி மு. மணிவண்ணன் அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மலேசிய மாநாட்டின் சிறப்பு அம்சங்கள்
முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2013 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும்.
ஆய்வுக் கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு ஆகஸ்டு 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் நடக்கவிருக்கிறது. கண்காட்சியும் மக்கள் கூடமும் ஆகஸ்டு 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும்.
மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ளலாம். கண்காட்சியிலும் மக்கள்கூடத்திலும் பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.
கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணிணித் தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
மாநாட்டின் கருத்தரங்கக் குழுவுக்கு முனைவர் பத்ரி சேஷாத்திரி அவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார். கருத்தரங்குக் குழு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வு செய்வதுடன், கருத்தரங்குகளைச் செவ்வனே நடத்தும் பொறுப்பையும் இக்குழு வகிக்கும்.
“கையடக்கக் கணினிகளில் தமிழ்”
இவ்வாண்டின் கருத்தரங்கிற்கு “கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை” என்ற தலைமைக் கருத்தை ஒட்டிய ஆய்வுக்கட்டுரைகளை ஏற்பாட்டுக் குழுவினர் வரவேற்கின்றார்கள்.
இணைய மாநாடுகள் ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல், கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு மாநாட்டின் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் நுட்பங்களை இத்துறையின் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களிடையே பரப்புதல், பயிலரங்குகள் நடத்திக் கணித்தமிழின் நுட்பங்களைப் பயிற்றுவித்தல், கணினி வழியாகக் கற்கும் மற்றும் கற்பிக்கும் பல்வேறு முறைகளை ஆசிரியர்களிடம் பரப்புதல் போன்ற முயற்சிகளை மாநாட்டுக்குழுவினர் எடுக்கவிருக்கின்றனர்.
கடந்த ஆண்டுகளை போலவே இவ்வாண்டும் கணினித் தமிழ்ச் சங்கம் கண்காட்சி அரங்கம் ஏற்பாடுகளில் பெரும்பங்கு வகிக்கும்.
கட்டுரைகளுக்கான தலைப்புகள்
கீழ்க் காணும் தலைப்புகளில் கட்டுரைகளை ஏற்பாட்டுக் குழுவினர் வரவேற்கின்றார்கள்:-
* செல்பேசிகள் மற்றும்  கணினிகளில் முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.
* மின் நூல்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர  உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.
* ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ் மற்றும் எச்.டி.எம்.எல் 5 குறுஞ்செயல்கள் (Apps).
* திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
* இயன்மொழிப் பகுப்பாய்வு பிழைதிருத்தி, தமிழ் எழுத்துருபகுப்பி, ஒலி உணர்தல், தேடல்பொறிகள் , இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.
* தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.
*தமிழ் தரவுத் தளங்கள்.
*கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
*தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்.
*கணினி வழி தமிழ்மொழி  பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்.
 கட்டுரைகள் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஆய்வுச் சுருக்கங்களும் இறுதிக் கட்டுரையும் திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும்.
இவை உரைக் கோப்புகளாக, எச்.டி.எம்.எல் (HTML) வடிவில், மைக்ரோசாஃப்ட் வேர்ட் (Microsoft word) அல்லது ஓப்பன் ஆஃபீஸ் கோப்புகளாக இருக்கலாம்.
பி.டி.எஃப் (PDF) அல்லது அதுபோன்ற திருத்தமுடியாத வடிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படா. கட்டுரைகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ அல்லது இரு மொழிகளும் கலந்த வகையிலோ இருக்கலாம்.
தமிழில் அல்லது இருமொழியில் இருந்தால், யூனிகோட் குறியீட்டில் மட்டுமே இருக்கலாம். பிற குறியீடுகளைக் கொண்டு அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
மாநாட்டு இதழ் ஒன்று அச்சு வடிவிலும் மின் வடிவிலும் வெளியிடப்படும்.
 ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநாட்டில் நேராகப் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டு இதழில் சேர்த்துக்கொள்ளப்படும். கட்டுரைகள் அனுப்புவோர் நேராக மாநாட்டுக்கு வந்து கட்டுரைகளைப் படிக்க ஒப்புக்கொள்கிறார் என்று புரிந்துகொள்ளப்படும்.
(4 பக்க அளவில்) இரு பக்கங்களுக்கு மிகாது கட்டுரைச் சுருக்கங்களை நிகழ்ச்சிகள் குழுவுக்கு cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கட்டுரையாளர்கள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
 கட்டுரை வந்து சேர்ந்தது குறித்து உடனடியாக உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் கட்டுரைச் சுருக்கங்களை ti2013.infitt.org என்ற இணைய தளம் மூலமும் சமர்ப்பிக்கலாம். கட்டுரைச் சுருக்கங்ள் அனுப்ப இறுதி நாள் 31 மே 2013 ஆகும்.
தமிழ் குறுஞ்செயலி உலகப் போட்டி:
கையடக்கக் கணினிகளின் தொழில்நுட்பம் வளர்ந்து கொடுப்பதற்கு ஈடாகத் தமிழிலும் குறுஞ்செயலிகள் (Apps)  வளர வேண்டும் என்பதை உணர்ந்தும் மேலும் பல நிரலாளர்களைத் (programmers) கணினித்தமிழுக்கு ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழுக்கான சிறந்த குறுஞ்செயலிப் போட்டி ஒன்றை அறிவிக்கிறோம்.
ஆப்பிள் ஐ-ஓஎஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ் 8 தளங்களுக்கான  குறுஞ்செயலிகள் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு உத்தமத்தின் வலைத்தளம்  ti2013.infitt.org அணுகவும்.
மாநாடு குறித்த கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்காணும் மின்முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்: ed@infitt.org மற்றும் chair@infitt.org
இந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டுக்கான செயலகம் கீழ்க்காணும் முகவரியில் செயல்படும்:-
 No 48A, First Floor
Jalan 1/19, Seksyen 1
PJ Old Town
46050 Petaling Jaya
Selangor, Darul Ehsan

(படம்; பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநாட்டுத் தலைவர், சி.ம.இளந்தமிழ், மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருடன் செல்லியல் மற்றும்  செல்லினம், வடிவமைப்பாளர்  முத்து நெடுமாறன்)

அமெரிக்காவின் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் இணைந்து புறநானூறு - பன்னாட்டு மாநாட்டினை 31.08.13 - 02.09.13 வரை நடத்துகிறது.

Posted

ன்புடையீர் வணக்கம்.
அமெரிக்காவின் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் இணைந்து புறநானூறு - பன்னாட்டு மாநாட்டினை 31.08.13 - 02.09.13 வரை நடத்துகிறது.
புறநானூறு என்பதை மையக் கருத்தாகக் கொண்டு பின்வரும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்தப் போட்டிகளில் வெற்றிபெறுவோருக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும்.
கட்டுரைப் போட்டி - முதற்பரிசு 1000$ இரண்டாம் பரிசு 500$
விநாடிவினாப் போட்டி - முதற்பரிசு 500$ இரண்டாம் பரிசு 250$
இசைப் போட்டி - முதற்பரிசு 500$ இரண்டாம் பரிசு 250$
ஓவியப் போட்டி - முதற்பரிசு 500$ இரண்டாம் பரிசு 250$
விருப்பமுள்ளோர் இதில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் இணையதளத்தைப் பார்வையிடவும். இந்த மாநாட்டைப் பற்றிய குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளில் எந்நாட்டவரும் பங்குபெறலாம். விருப்பமுள்ளோர் பயன்பெறுக.
www.classicaltamil.org
நன்றி

மேலும் வெளியீட்டகம் நடத்தும் பாராட்டும் படைப்பாளியுடன் சந்திப்பும் 29.3.2013,மாலை 5.00மணி

Posted


அயோத்யா அறை ,திருநெல்வேலி ஜானகிராம் உணவகம்

                        பணிநிறைவு ப் பாராட்டுப் பெறு பவர்கள் 
முனைவர் ஆ .தனஜ்செயன் ,
நாட்டார் வழக்காற்றியல் துறைத் தலைவர் 
தூய சவேரியார் கல்லூரி 
 முனைவர் வே .கட்டளை கைலாசம்
தமிழ்த்  துறைத் தலைவர்
ம .தி .தா .இந்துக்  கல்லூரி 




                       பாராட்டுப் பேசு பவர்கள் 
 முனைவர்நா .இராமச்சந்திரன் 
நாட்டார் வழக்காற்றியல் 
தூய சவேரியார் கல்லூரி


முனைவர் ச .மகாதேவன் 
 தமிழ்த்  துறைத் தலைவர் 
 சதக்க த் துல்லாஹ் அப்பா கல்லூரி 


கவிதை  வாசிப்பு

கல்யாண்ஜி

இலக்கியப் போக்குகள்

கவிஞர் சுகுமாரன்
திருவனந்தபுரம்

நிகழ்ச்சி த் தொகுப்பாளர்
முனைவர் நா .வேலம்மாள் 

நிகழ்ச்சி அமைப்பு
திரு .சிவசு 

கல்யாண்ஜிமுகநூல்

Posted

நெருக்கடியான வாழ்வியல் நிகழ்வுகளை த் தன் அழகியல் பதிவுகளால் கடக்க வைக்கும் மென்மையான வாழ்வியல் சித்திரங்களை க் கவிதைகளாகப் பதிவு செய்து வருபவர் கல்யாண்ஜி .50ஆண்டுகள் ஆகிறது அவர் எழுதத் தொடங்கி .யாரும் எழுதாத எளிய மனிதர்களின்  வாழ்வியல் சித்திரங்களை க் கவிதைகளாகப் பதிவுசெய்துவரும் கல்யாண்ஜிமுகநூல் பரப்பில் படைத்த 50 கவிதைகள் நிறைய வாசகர்களால் விரும்பவும் பகிரவும் பட்டன .மேலும் பதிப்பக நிறுவனர் சிவசு ,கட்டளை கைலாசம் அய்யா ,திருமதி வேலம்மாள் ,நான் ஆகிய நால்வரும் பாளையம்கோட்டை ரயில்வே சாலைத் தெருவிலுள்ள சிவசு அய்யா வீட்டில் கவிதை வாசித்தல் நிகழ்வை நடத்தினோம் .பூத்துக்கிடந்த செம்பருத்திப் பூக்கள் சாட்சியாக கல்யாண்ஜிமுகநூல் கவிதைகள் வாசிப்பு நிகழ்வு 3மணி நேரம் நடைபெற்றது .,திருமதி வேலம்மாள்,கல்யாண்ஜியின் தேக்கும் பூக்கும் எனும் கவிதையால் தொடங்கி வைத்தார் .வாசித்து முடித்த த்ததும் அது எங்களுக்குள் எழுதிய கவிதை குறித்து நிறையப் பேசினோம் .விஸ்வரூபம் குழந்தைகள் சுட்டு விரலை சுடு விரலாக மாற்றிய கவிதை ,பூனைகள் தொடர்பான கவிதைகள் ,மனநிலை பாதிக்கப் பட்டவன் கவிதை ,என மென்மையைக் கவிதையை க் .,திருமதி வேலம்மாள்,வாசித்து முடிக்க ,நான் அடுத்து வாசித்தேன் .குடித்து மிச்சம் வைத்த தேனீர் கவிதை நால்வரையும் பாதித்தது .லாடம் கவிதை நன்றாக இருந்தது .கார்சேரி அத்தை குறித்த கவிதை தூக்கு குறித்த அதிர்வலைகளை எங்கள் நால்வருக்கும் தந்தது .இந்து ஆசிரியர் சிவசுவின் கட்டளை அய்யாவின் பத்தமடை ஆசிரியர்களை முன்னிறுத்தியது .அருமையான கவிதைகள் வாசித்த அருமையானநாள் .

ரசி யாவற்றையும் சௌந்தர மகாதேவன்

Posted

கசந்த காலமும் இல்லை

வசந்த காலமும் இல்லை

நிகழ்காலத்தில் நின்று
ரசி யாவற்றையும்

                                 சௌந்தர மகாதேவன்

முகநூலில்

Posted

விருப்பங்களால் 
விரிவாகி
விரைகின்றன 
முகநூலில் 
நம் முகங்களும் 
அகங்களும் 
                        சௌந்தர மகாதேவன் 

ம .தி .தா .இந்துக் கல்லுரி த் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் கட்டளை கைலாசம் அவர்களுக்குப் பணி நிறைவுப் பாராட் டு விழா

Posted




ம .தி .தா .இந்துக் கல்லுரி த் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் கட்டளை கைலாசம் அவர்களுக்குப் பணி நிறைவுப் பாராட் டு விழா நெல்லை ஜானகி ராம் உணவகம் நாள் :29.3.13 மாலை 5மணி நெல்லை ஜானகி ராம் உணவகம் நாள் :29.3.13 மாலை 5மணி

முனைவர். ச. மகாதேவன்

Posted







      சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். ச.மகாதேவன், 15 வயது முதல் தமிழகத்தின் முன்னணி இதழ்களில் எழுதிவருபவர்.  20 வயதில் பாரதப் பிரதமரின் “சத்பவனா தேசிய விருதையும் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் “தேசிய அங்கீகரிப்புச் சான்றிதழும் ரூ.10,000/- முதல் பரிசும் பெற்றவர்.  தமிழக அரசு தஞ்சையில் நடத்திய “புதுக்கவிதைகளில் சமுதாய நோக்கு எனும் கட்டுரை எழுதித் தமிழக முதல்வரின் தங்கப் பதக்கத்தைப் பெற்றவர்.  மதுபோதை ஒழிப்பு ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் தமிழக ஆளுநரின் விருதினைப் பெற்றவர்.  பாலம் அமைப்பின் இளம் சமூக சேவகர் விருது, சென்னை அரிமா சங்கத்தின் டாக்டர் ராதா கிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது, பாலம் நிறுவனத்தின் சார்பில் லட்சியத்தம்பதியர் விருது உட்படப் பல்வேறு விருதுகள் பெற்றவர்.  தமிழக அரசின் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பாடநூல் ஆசிரியர் தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகளில் 52 ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார்.  மெல்லத் தமிழ்இனி கட்டுரைப் போட்டியில் பத்மஸ்ரீ. கமல்ஹாசனிடமும்,  “அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள எனும் நூல்திறனாய்வுக்காக திரு. ரஜினிகாந்திடமும் விருதுகள் பெற்றவர்.  மீனாட்சி மிஷன் தமிழக ஆசிரியர்களிடம் நடத்திய “மனதில்நின்றமாணவர்கள் எனும் கட்டுரைப் போட்டியில் மாநில முதலிடம் பெற்றவர்.  சென்னை கம்பன் கழகம் நடத்திய சீறாப்புராணக்கட்டுரைப் போட்டியில் மாநில முதலிடம் பெற்றுநீதியரசர் மு.மு.இஸ்மாயிலிடம் விருது பெற்றுள்ளார்.  சன் தொலைக்காட்சியில் “விசுவின் அரட்டை அரங்கம்“ நிகழ்ச்சியில் உரையாற்றி உள்ளார்.  அகில இந்திய வானொலியில் 120 முறை உரையாற்றியுள்ளார்.  மகாபாரதி இணைய வலைப்பூவை 2011 சனவரி முதல் நடத்தி வருகிறார். “நேர்மையும் திறமையும் இருந்தால் வாழ்வில் உதவ மனிதர்கள் காத்திருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறார் பேராசிரியர். ச. மகாதேவன்

மகாகவி பாரதி

Posted

அக்கினிக் குஞ்சொன் று கண்டேன் -அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு -தழல்
வீரத்தில் குஞ்சென்று மூப்பென்று முண்டோ ?
தத்ததரி கிட தத்ததரி கிட தித்தோம்
                                                     மகாகவி பாரதி

இலக்கிய செல்வர் திரு .குமரி அனந்தன்

Posted

தரமானப் பேச்சுக் கலை க் கலை குன்றக்குடி அடிகளாருடன் ,திருமுருகக் கிருபானந்த வாரியாருடன் ,புலவர் கீரனுடன் போய் விட்ட நிலையில் அந்தத் தலைமுறையின் மிச்சம் இலக்கிய செல்வர் திரு .குமரி அனந்தன் அவர்கள் .நெல்லைக்கு நம் கல் லூரி த் தமிழ்த்துறை நடத்திய கருத்தரங்கி ல் பங்கு பெற வந்திருந்தார் .ஆதிச்ச நல்லூர் அகழ் வாய்வு கள் நடை பெற வேண்டும் என்றார் .81வயதிலும் தங்கு தடை இன்றிப் பேசினார் .அரசியல் ஒரு துளி கூட வராமல் அவரால் ஒரு மணி நேரம் இலக்கியம் பேச முடிந்தது .

திரு .,தமிழிசை மம்முது .

Posted

அந்த நாள் இசையோடு கழிந்தது .இன்டிகாவில் பயணித்தபடி தொடங்குகிறார் திரு .,தமிழிசை மம்முது .செய்துங்கநல்லூர் தாண்டுகிறது வண்டி .வான் நோக்கி எட்டத் துடிக்கும் மருத மரங்கள் ..பெண்கள் அரிசி புடைப்பர் ,அதற்குப் பெயர் தெள்ளுதல் தெரியுமா ?என்றார் .அப்போது பிறந்த இலக்கியம்தான் திருத் தெள் ளே னம் என்றார்.இசைக்கு அடிப்படை ஆனந்தம் .படுமலைப் பாலை என்ற பண் நடபைரவி என்று இன்று பாடப்பட்டு வருகிறது .விண்ணோடும் முகிலோடும் என்ற பாடல் ,மயிலிற ஹாய் மயிலிற ஹாய் என்ற பாடல் அந்தப் பண் தான் என்றார் .காதல் உணர்வினை த் தரும் பண் அது என்றார்.பாலை நிலத்தின் பண் அரும் பாலை.சங்கராபரணம் எனும் பண் ணும் அதுதான் .நர்சரி பிள்ளைகள் பாடும் லண்டன் பிரிட்ஜ்  லண்டன் பிரிட்ஜ் எனும் பாடல் அந்தப் பண்தான் என்றார் .நெய்தல் திணைப் பாடல் தோடி எனும் பண் .கங்கைக் கரை மன்னனடி ,இசை கேட்க எழுந்தோடி எனும் பாடல் அந்தப் பண்தான் என்றார்.இசை மேதை இளையராஜா ,இசைப்புயல் ஏ .ஆர் .ரஹ்மான் என அத்தனை இசை ஆளுமைகளும் மதிக்கும் திரு .,தமிழிசை மம்முதுஉடன் காயல் பட்டினம் வாவு வாஜீஹா மகளிர் கல்லூரியில் சிறப்புரை ஆற்றிய 14.3.13நாள் மறக்க முடியாது .,தமிழிசை குறித்த  சிந்தனை  அலைகளை அந்த நாள் தந்து சென்றது .

திருநெல்வேலி- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.

Posted







எங்களுர்
திருநெல்வேலி
கடைவீதி முழுக்கக்
கலர் கலராய் அல்வாக்கள்
மஸ்கோத் அல்வா முதல்
சேரன்மகாதேவி
கேரட் அல்வா வரை
அத்தனையும் தயார் . . .
கொடுக்கத்தான்
ஆள் வேண்டும்.

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.


பழமொழி சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.

Posted



எதுவும் தெரியாத
மக்கென்று பரிகசித்தாய்
கற்கத் துணிந்தேன்
மெத்தப் படித்த திமிரென்றாய்
மெல்ல அழுததோடு
அமைதி காத்தேன்
அமைதியும் ஒரு வகை
அகம் பாவம் தானென்றாய்
ஊமையாய் உலவினேன்
ஊமை ஊரைக் கெடுக்கும்
பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும், என்று
பழமொழி கொண்டு
பலமாகத் தாக்கினாய்
நீ குற்றம் சொல்வதிலேயே
குறியாயிருப்பவன் என்பதால்
இப்போதெல்லாம்
சும்மாயிருத்தலே
சுகமென்றிருக்கிறேன்
மூளையைக் கூர்தீட்டி
அதற்கொரு பழமொழியை
இதற்குள் தேடியிருப்பாயே!
சொல்லித் தொலை
என்ன செய்ய?
கேட்டுத் தொலைக்கிறேன்.

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.